பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி; முப்படைகளும் தயார் நிலையில் இருக்க மத்திய அரசு உத்தரவு..!
Central government orders all three forces to be on alert
பாகிஸ்தான் நாட்டையொட்டி இருக்கும் பகுதி இந்தியாவின் ஜம்மு காஷ்மீர். இந்த மாநிலத்தில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தவே சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு காஷ்மீர், லடாக் என 02 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் அனந்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மலைப்பகுதியில், சுற்றுலா பயணிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்த தீவிரவாத தாக்குதலில் 02 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், இந்திய கடற்படை அதிகாரி வினய் நர்வால், உளவுத்துறை அதிகாரி மணீஷ் ரஞ்சன், கர்நாடகாவை சேர்ந்த பங்குச்சந்தை மஞ்சுநாத் உள்பட 26 பேர் உயிரிழந்தனர், பலர் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலில், குறிப்பாக பயங்கரவாதிகள் ஒவ்வொருவரின் பெயரை கேட்டு, அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர் என அறிந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். கொலை செய்யப்பட்ட அனைவரும் ஆண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்துக்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று அங்கு ஹெலிகாப்டர், டிரோன் உதவியுடன் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்தநிலையில், பயங்கரவாத தாக்குதல் தொடர்பான நிலைமை குறித்து நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன், பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து முப்படைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் பதிலடி தருவதற்கு இந்தியா தயாராகவுள்ளது.
English Summary
Central government orders all three forces to be on alert