தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு: அதிகாரிகளின் சொத்து விவர சேகரிப்புக்கு எதிரான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு..!
Hearing on the petition against the collection of asset details of officials in the Thoothukudi shooting case adjourned
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து முடித்து வைத்தது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற காலத்தில் பணியாற்றிய காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்களை 03 மாதங்களுக்குள் சேகரிக்கும்படி, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூலை 15-ந் தேதி உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த உத்தரவுக்கு தடைவிதிக்கக் கோரி, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜோய்மாலா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று மீண்டும் விசாரிக்க இருந்தது.
ஆனால், நேரமின்மை காரணமாக விசாரணையை ஏப்ரல் 30-ந் தேதிக்கு தள்ளி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
English Summary
Hearing on the petition against the collection of asset details of officials in the Thoothukudi shooting case adjourned