டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! அடுத்த மாதம் வெளியாகியது மிகமுக்கிய அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட நான்காம்  தொகுதி  (குரூப் - 4) பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு கடந்த ஜூன் 9&ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வின் மூலம் 6244 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. 

ஆனால், 16 லட்சம் பேர் இந்தத் தேர்வுகளை எழுதிய நிலையில் காலியிடங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்களை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குரூப் 4 காலி பணியிடங்களை அதிகரிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

முன்னதாக இன்று காலை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்,  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களை 15,000 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இது குறித்து அவரின் செய்தி குறிப்பில், டி.என்.பி.எஸ்.சி கடந்த 11ஆம் நாள் வெளியிட்ட அறிவிப்பில் காலியிடங்களின் எண்ணிக்கை 480 மட்டுமே உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது எந்த வகையிலும் போதுமானது அல்ல.

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 6 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட 2 லட்சம் பணியிடங்கள் நான்காம் தொகுதியைச் சேர்ந்தவை ஆகும்.

இவற்றை நிரப்புவதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக அதை செய்யவில்லை. டி.என்.பி.எஸ்.சி நான்காம் தொகுதித் தேர்வு இரு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் நடக்கிறது. 

இடைப்பட்ட காலத்தில் 15 ஆயிரத்திற்கும் கூடுதலான நான்காம் தொகுதி பணியாளர்கள் ஓய்வு பெற்று இருப்பார்கள். அவ்வாறு இருக்கும் போது வெறும் 7024 பணியிடங்களை மட்டும் நிரப்புவது நியாயமல்ல. 

எனவே, தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று டி.என்.பி.எஸ்.சி நடத்திய தேர்வின் மூலம் நிரப்பப்படவுள்ள நான்காம் தொகுதி பணியிடங்களின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக அரசு உயர்த்த வேண்டும்" என்று மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தி இருந்தார்.

இதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டவர்களும், சமூக வலைத்தளங்கள் மூலமாக பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPSC Group 4


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->