TNPSC: குரூப் 1 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம்! இன்னும் 10 நாள் தான் இருக்கு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 1 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் ஏப்ரல் 30-ஆம் தேதியுடன் முடிவடைகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் 1-ஆம் தேதி தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in  http://www.tnpsc.gov.in  மூலமாக வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன.

குரூப் 1 தேர்வின் கீழ் துணை ஆட்சியர் (Deputy Collector) 28 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) 7 இடங்கள், வணிகவரி உதவி ஆணையர் 19 இடங்கள் உள்ளிட்ட மொத்தம் 70 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதனுடன், குரூப் 1ஏ பிரிவில் உள்ள 2 இடங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்வு நடைபெற உள்ளது.

முதற்கட்டமான எழுத்துத் தேர்வு வரும் ஜூன் 15-ஆம் தேதி நடைபெறும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களுக்கு, விண்ணப்பிக்கும் கடைசி நாளான ஏப்ரல் 30-க்குள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNPSC Group one exam application


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->