கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் - எப்போது வெளியாகும்?
today veterinary course ranking list published
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகத்தில் 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகள் உள்ளன.
இது மட்டுமல்லாமல், திருவள்ளூர் மாவட்டம் கோடுவெளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு, பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு, ஒசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு உள்பட மொத்தம் 3 பட்டப்படிப்புகள் உள்ளன.
இந்த மூன்று பட்டப் படிப்புகளும் நான்கு ஆண்டுகள் படிப்புகள் கொண்டவை. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, சின்ன சேலம், உடுமலைப்பேட்டை, தேனி, ஒரத்தநாடு உள்ளிட்ட இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன.
இந்தக்கல்லூரிகளில் இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புக்கு 660 இடங்களும், தொழில்நுட்ப பிரிவுகளான பி.டெக். உணவு, பால், கோழியினம் உள்ளிட்ட படிப்புகளுக்கு 100 இடங்களும் உள்ளன. இதில், இளநிலை கால்நடை மருத்துவப் படிப்பில் சேர மாணவர்களிடமிருந்து 14,500 விண்ணப்பங்களும், தொழில்நுட்பப் படிப்புகளுக்கு 3,000 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இளநிலை கால்நடை மருத்துவப் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் இன்று காலை 10 மணிக்கு வெளியாகும். இதனை https://adm.tanuvas.ac.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
today veterinary course ranking list published