திமுக அரசு செய்வது சரியானதல்ல.. டிடிவி தினகரன் பரபரப்பு ட்வீட்.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் அலுவலகப் பணியாளர் நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்கவேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில், தமிழகம் முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(Government Aided Schools) பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் அலுவலகப் பணியாளர் நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் தி.மு.க அரசு இழுத்தடித்து வருவது சரியானதல்ல. 

இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தமிழக அரசு அதன்படி செயல்படாமல், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என காரணம் காட்டி காலம் தாழ்த்தி வருவதால் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(Government Aided Schools)  ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஊதியமின்றி செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 

எனவே, தி.மு.க அரசு இந்தப் பணியிடங்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளித்து உரிய ஊதியம் அவர்களுக்கு கிடைப்பதற்கு வழிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dinakaran tweet for govt aided school teachers


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->