பரந்தூர் மக்களை சந்திக்கும் விஜய்க்கு போலீசார் போட்ட கண்டிஷன்!
Parandhur Airport Protest TVK Vijay
வரும் திங்கட்கிழமை (20.01.2025) ஏகனாபுரம் கிராம மக்களை சந்தித்து விஜய் தனது ஆதரவை தெரிவிக்க உள்ள நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ச்சிக்காக 5 ஏக்கரில் நிலம் தேர்வு செய்யப்பட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரந்தூர் மக்களை சந்திக்க காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. மேலும் மக்களை சந்திக்கும் விஜய்க்கு காவல்துறை சில முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி,
* அனுமதி அளித்த இடத்தில் மட்டும் தான் மக்களை விஜய் சந்திக்க வேண்டும்.
* அனுமதிக்கப்பட்ட வாகனத்தில், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் தான் வர வேண்டும்.
* குறிப்பிட்ட நேரத்திற்குள் கூட்டத்தை முடிக்க வேண்டும்.
* பொதுமக்களை விஜய் சந்திக்க 2 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்து கொள்ள அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த இடத்தில் விஜய் மக்களை சந்திக்க உள்ளார் என்பது குறித்து இன்று மாலை முடிவெடுக்கப்பட உள்ளது
English Summary
Parandhur Airport Protest TVK Vijay