வரும் 26 ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் - இதெல்லாம் கட்டாயம் இருக்க வேண்டும்.!
coming 26 gramashabi meeting in kanchipuram
வருகின்ற குடியரசு தினமான 26.01.2025 அன்று காலை 11.00 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
"காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற 26.01.2025 குடியரசு தினமான அன்று காலை 11.00 மணிக்கு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன. கிராம சபைக் கூட்டங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்ட பணிகள், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும்.
மேலும் மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2025-26 ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித் திட்டம் தயாரித்தல், மற்றும் இதர பொருட்கள், கிராம ஊராட்சிகள் தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வரவு செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளிப்படுத்திட வேண்டும். பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக பிளக்ஸ்பேனர் மூலம் வரவு செலவு கணக்கு வைக்கப்பட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
coming 26 gramashabi meeting in kanchipuram