தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு.!!
vectrinary course rank list rleased today
தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு.!!
தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிகளில் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு சார்ந்த நான்கு இளநிலை பட்டப்படிப்புகளுக்கும், உணவு, பால்வளம், கோழியினம் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளுக்கும் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பில் 660 இடங்களுக்கும், சென்னை செங்குன்றத்தில் உள்ள தொழில்நுட்ப படிப்புக்கான கல்லூரியில் உணவு மற்றும் பால்வள தொழில்நுட்ப படிப்புகளில் 60 இடங்களுக்கும், கிருஷ்ணகிரியில் உள்ள கோழியின தொழில்நுட்ப கல்லூரியில் 40 இடங்களுக்கும் தமிழ்நாடு கால்நடை அறிவியல் மற்றும் மருத்துவ பல்கலைக்கழகம் இந்த கலந்தாய்வை நடத்துகிறது.
மேற்கண்ட இந்த இடங்களுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 22 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு மாணவர்கள், தொழில்நுட்ப படிப்புகளில் சேரும் மாணவ-மாணவிகள் ஆகியோருக்கு மட்டும் நேரடியாகவும், மற்றவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் கலந்தாய்வு நடக்க உள்ளது..
இந்த நிலையில், விண்ணப்பதாரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட உள்ளது.
விண்ணப்பதாரர்கள் தரவரிசைப் பட்டியலை https://adm.tanuvas.ac.in, https://tanuvas.ac.in என்ற இணையதளங்களில் சென்று பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் வாரத்தில் கலந்தாய்வு தொடங்கி நடைபெற உள்ளது.
English Summary
vectrinary course rank list rleased today