கால்நடை மருத்துவ அறிவியல் இளநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு.!!
Veterinary science courses counseling date announced
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இளநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு 16-ம் தேதி தொடங்குகிறது. BVSc & B,Tech உணவு தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளுக்கான கலந்தாய்வு நேரடியாக நடைபெறுகிறது விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் & மாற்றுத்திறனாளிகளுக்கு ஆகஸ்ட் 16ம் தேதியும், 7.5% இடஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 17ம் தேதியும் நடைபெறுகிறது
அதேபோன்று பொது பிரிவு மாணவர்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 18ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வு சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் நேரடியாக நடைபெறுகிறது.
மேலும், இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் கலையியல் மற்றும் தொழிற்கல்வி பிரிவு பட்டப்படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நடைபெறும் எனவும், அதற்கான தேதி & நேரம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும், மேலும் விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக இணையதளமான www.adm.tanuvas.ac.in மற்றும் www.tanuvas.ac.in ஆகியவற்றில் காணலாம் என கால்நடை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
English Summary
Veterinary science courses counseling date announced