யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.! - Seithipunal
Seithipunal


இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகத்திலும், செங்கல்பட்டிலும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரிகள் உள்ளன.

இந்த 2 அரசு கல்லூரிகளில் 160 இடங்கள் உள்ளன. 17 தனியார் கலர்களில் மொத்தம் உள்ள 1517 இடங்களில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு 960 இடங்கள் இருக்கின்றன. நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 557 இடங்கள் உள்ளன.

ஐந்தரை ஆண்டுகள் கொண்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்டப் படிப்புக்கு மாணவர்கள் இன்று முதல் http://www.tnhealth.tn.gov.in என்ற இணையதளம் மூலம் இன்று மாலை (ஆகஸ்ட் 14ஆம் தேதி) வரை விண்ணப்ப படிவம் மற்றும் தகவல் தொகுப்பேட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அதனைத் தொடர்ந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ இன்று மாலை (ஆகஸ்ட் 14ஆம் தேதி) மாலை 5 மணிக்குள் இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி துறை அலுவலகம், சென்னை 600106 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yoga and naturopathy course apply Last date today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->