இன்று சிவன் கோவிலுக்கு சென்று சிவனை, வழிபட்டால் என்ன நடக்கும் தெரியுமா? - Seithipunal
Seithipunal


உணவை வீணாக்காதீர்கள்... அன்னதோஷம் பிடிக்கும் !!

உலகெங்கும் சிவனின் லிங்க திருமேனிக்கு ஐப்பசி மாதம் வரக்கூடிய பௌர்ணமி அன்று வருடந்தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அன்னப்பருக்கையிலும் சிவரூபம் உள்ளதாக புராணங்கள் செல்லுகிறது.

உலக உயிர்களுக்கு உணவு அளிக்கும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விழா நடத்தப்படுகிறது.

தஞ்சாவூர் பெரியகோவில் பெருவுடையாருக்கு ஆயிரம் டன் சாதத்தால் அலங்கரித்து அந்த உணவை பிரசாதமாக பக்கதர்களுக்கு வழங்கப்படும்.

தமிழகத்தின் முக்கிய ஆன்மீக ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் அன்னாபிஷேகமும் ஒன்று ஆகும்.

யார் யாருக்கு அன்னதோஷம் ஏற்படும்?

பசியால் வாடும் பச்சிளம் பாலகர்களுக்கு சாப்பிட எதுவும் கொடுக்காதவர்களையும், வயதானவர்களையும், கர்ப்பிணிகளையும் சாப்பிடவிடாமல் தடுப்பவர்களுக்கு அன்னதோஷம் பிடிக்கும். பந்தியில் சாப்பிட உட்கார்ந்தவர்களை எழுப்புவதும் பாவச்செயல்.

தான் உண்டது போக ஏராளமான உணவு கைவசம் இருந்தும், அதை யாருக்கும் பகிர்ந்து அளிக்காமல் குப்பையில் வீசுபவர்களையும், உணவுகளை வீணாக்குபவர்களையும் அன்னதோஷம் உண்டாகும்.

அன்னாபிஷேக தரிசனம் :

அன்னாபிஷேக நாளில் சிவபெருமானை அன்னாபிஷேக கோலத்தில் தரிசிப்பது மற்றும் அன்னாபிஷேகத்திற்கு தேவையான அரிசி (பச்சரிசி) வாங்கி கோவிலுக்கு கொடுப்பது மற்றும் குறைந்தது ஐந்து பேருக்கு அன்னதானம் போன்றவற்றை செய்வது நன்மை தரும்.

ஸ்ரீ அன்னபூரணியை வணங்கிவர உணவு வீணாகுவது குறையும். மேலும், உணவு தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்யும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இன்று நடைபெறும் அன்னாபிஷேக வழிபாட்டில் கலந்துக்கொண்டு இறைவனின் பரிபூரண அருளைப் பெற்று உங்களது குறைகளை நீக்கி நலமுடன் வாழுங்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

god sivan temple


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->