மம்முட்டியின் 73 வது பிறந்த நாள்! புதிய படத்தின் அப்டேட் வெளியீடு! - Seithipunal
Seithipunal


நடிகரும், இயக்குனருமான கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மலையாள நடிகர் மம்முட்டி நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

கேரளா நடிகர் மம்முட்டியின் 73வது பிறந்தநாள் இன்று. மலையாள திரை உலகில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நடிகர் மம்முட்டி. 

இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள், மலையாளத் திரைப் பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் மம்முட்டியின் பிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்கு அவரின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இது இயக்குனர் கௌதம் மேனனின் முதல் மலையாள திரைப்படமாகும். இப்படத்தை நடிகர் மம்முட்டியே தயாரிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளார் என்று தகவல்கள்  வெளியாகி உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mammoottys 73rd Birthday New movie update release


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->