பாதி பாகம் திரையரங்குகளில், மீதி பாகம் ஓடிடியில் வெளியாகவுள்ளது விடுதலை 2! - Seithipunal
Seithipunal


இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படம் முதல் பாகத்தில் நடிகர் சூரி மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தனர். இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக வெற்றிப்படமாகவே அமைந்தது. 

இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்காக மீதமுள்ள காட்சிகள் இறுதிக்கட்டதை அடைந்துள்ளது. இதில் நடிகர் சூரி மற்றும் நடிகர் விஜய் சேதுபதிக்கான காட்சிகள் படமாக எடுக்கப்பட்டு வருகின்றன.

விடுதலை 2 இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.  மேலும், இப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார் எனவும், உலகமெங்கும்  இப்படம் டிசம்பர். 20-ம் தேதி அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இதுவரை இயக்குனர் வெற்றிமாறன் இந்த இரண்டாம் பாகத்திற்காக எடுத்துள்ள காட்சிகளின் நீளம் 4 மணி நேரம் அதிகமாக இருப்பதாகவும், தற்போது எடுத்து வரும் காட்சிகள் அனைத்தும் இணைத்து ஒப்பிட்டு பார்க்கும் போது இப்படம் 4 மணி நேரத்திற்கு குறைய வாய்ப்பில்லை என்றும் சொல்லப்படுகிறது. 

இதனால்  இரண்டரை மணி நேரம் விடுதலை 2ம் பாகத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்துவிட்டு அதற்குப்பின் சில நாட்கள் கழித்து மீதி பாகத்தை  ஓடிடியில் ரிலீஸ் செய்ய இயக்குனர் வெற்றிமாறன் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Half of it will be released in theaters and the rest will be released in OTT


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->