விநாயகர் சதுர்த்தி நன்னாளில் பெண் குழந்தையை பெற்றெடுத்த நடிகை தீபிகா படுகோன்! - Seithipunal
Seithipunal



பிரசவத்திற்காக நடிகை தீபிகா படுகோன் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் லேடி சூப்பர் ஸ்டாராக விளங்கி வரும் நடிகை தீபிகா படுகோன், கோலிவுட்டில் கோச்சடையான், சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 

இறுதியாக  பான் இந்தியா திரைப்படமான கல்கி திரைப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் தீபிகா படுகோன் ஈர்த்து இருந்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்ட தீபிகா படுகோன், திருமணத்திற்கு பின்பும் பல திரைப்படங்களில் நடித்திருந்தார். 

தீபிகா படுகோன் கருவுற்று இருப்பதாகவும், இந்த மாத இறுதியில் அவருக்கு குழந்தை பிறக்கும் என்றும் மருத்துவர்கள் கணித்திருந்தனர்.

மேலும் இதனை உறுதிப்படுத்தும் விதமாக தன் கணவருடன் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படங்களை தீபிகா படுகோன் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தீபிகா படுகோன் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

மேலும் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, அவருக்கு நேற்றைய தினம் மாலை 5 மணி அளவில் சிசேரியன் மூலம் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Deepika Girl Baby Mumbai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->