சசிகலா வருகை : களத்தில் இறங்கும் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு - வெளியான ரகசிய தகவல்! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் ஒற்றை தலைமை யார் என்ற போட்டியில் எடப்பாடி பழனிசாமி தான் என்று, நீதிமன்றம் தீர்ப்பின்படி உறுதியாகியுள்ளது. 

ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவை மீண்டும் ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். மேலும், சசிகலா, டிடிவி தினகரனை ஒன்றிணைந்து செயல்பட அழைப்பும் விடுத்துள்ளார். 

அதே சமயத்தில் அதிமுக தலைமை நான் தான் என்று, சசிகலா ஒரு பக்கம் தமிழக முழுக்க தீவிர சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார். 

அதன்படி, வரும் திங்கட்கிழமை சேலம் மாவட்டத்தில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அந்த பயண விவரப்படி, தஞ்சையிலிருந்து திருவையாறு, திருமானூர், கீழப்பலூர், அரியலூர், பெரம்பலூர் வழியாக சேலம் மாவட்டம் வீரகனூர் வர இருக்கிறார்.

12-ந் தேதி : தலைவாசல், ஆத்தூர் பஸ் நிலையம், புத்திரகவுண்டன் பாளையம், வாழப்பாடி பஸ் நிலையம், சேலம் 4 ரோடு பகுதி, அண்ணா பூங்கா, தாதகாபட்டி, சீலநாயக்கன்பட்டி, பைபாஸ் ரோடு சூரமங்கலம் ஆகிய பகுதிகளில் கட்சி தொண்டர்களையும் பொதுமக்களையும் நேரில் சந்திக்கிறார். 

13-ந் தேதி : அரியானூர், மகுடஞ்சாவடி, சங்ககரி-எடப்பாடி பிரிவு, வெப்படை, பள்ளிப்பாளையம் ஆகிய பகுதிகளில் கட்சி தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திக்கிறார். 

வழி நெடுகிலும் சசிகலாவுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க டிடிவி, ஓபிஎஸ் ஆதரவாளர்களும், சசிகலா ஆதரவாளர்களும் தயாராகி வருகின்றனர். 

சேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டை என்பதால் அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலாவின் இந்த சேலம் விசிட்டை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் நோட்டமிட்டு, நடக்கும் நிகழ்வுகளின் முக்கிய தகவல்களை தலைமை நிர்வாகிகளுக்கு அனுப்புவார்கள் என்று சொல்லப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sasikala salem plan ops eps side info


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->