மல்லி விதையில் இவ்வளவு நன்மைகளா? - வாங்க பார்க்கலாம்.!
benefit of Coriander seeds water
சமையலில் மிகவும் முக்கிய பங்கும் வகிப்பது மல்லி விதைகள். இதனை போடி செய்து போட்டால் எப்படிப்பட்ட குழம்பும் மணக்கும். அப்படி உள்ள இந்த மல்லிவிதையை தண்ணீரில் ஊற வைத்து குடித்து வந்தால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பது குறித்து பார்க்கலாம்.
* மல்லி விதைகளை தண்ணீரில் ஊறவைத்து தினமும் காலையில் குடித்து வரும் போது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்து இன்சுலின் அதிகமாக தூண்டப்படுகிறது. இதனால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டிற்கு வருகிறது.
* இந்தத் தண்ணீர் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரி செய்யவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், செரிமான மண்டலத்தை சீராக்கவும், மலச்சிக்கல் பிரச்சனை இல்லாமல் பாதுகாக்கவும் பெரிதும் உதவி புரிகிறது.
* ஆஸ்துமா, நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களை தீர்க்கும். இந்த மல்லி விதையில் லினோலிக் ஆசிட், சினோல் ஆசிட் போன்ற அமிலங்கள் நிறைந்துள்ளதால் மூட்டு வீக்கம், மூட்டு தேய்மானம் உள்ளிட்ட எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை வரவிடாமல் தடுக்கிறது.
* இந்த மல்லி விதை தண்ணீர் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் உயர் இரத்த அழுத்தம் குறைந்து மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
* மெட்டபாலிசத்தை அதிகரித்து வளர்ச்சிதை மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது.
இப்படி பல்வேறு நன்மைகளும் இந்த மல்லிவிதை ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் உடலில் ஏற்படும்.
English Summary
benefit of Coriander seeds water