நெல்லிக்கனியை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?..!
Benefits of Nellikaai or Malai Nellikai Health Tips
நெல்லிக்கனியை சாப்பிட்டால் மரணத்தையே தள்ளிப்போடலாம் என்று பெயரிவார்கள் கூறியவர்கள். நெல்லக்கனியை சாப்பிட்டு உடனே தண்ணீர் குடித்தால், அதில் உள்ள இனிய சுவைக்கு ஈடு இணையே இல்லை என்று தான் கூற வேண்டும். அவ்வுளவு அருமையாக இருக்கும்.
தினமும் ஒரு நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தால், நமது தேகத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கும். நாம் இளமையாக இருக்க உதவும் அருமையான டானிக்காக நெல்லிக்கனி இருக்கிறது. நோய்களை அண்டாமல் பார்த்துக்கொள்வது, இருதயத்தை பலப்படுத்துவது, சிறுநீரகத்தை பலப்படுத்துவது என பல நன்மைகளை செய்கிறது.
ஒரு கரண்டி நெல்லி சாறுடன், அரை கரண்டி தேனை சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் ஏற்படாது. நெல்லிச்சாறுடன் பாகற்காய் சாறினை சேர்த்து சாப்பிட்டு வந்தால், கணையத்தின் இன்சுலின் சுரப்பை அதிகரித்து சர்க்கரை நோய் பிரச்சனையை சரி செய்யும்.
நெல்லிக்காய் பொடியுடன் நாவல்பழ பொடி மற்றும் பாகற்காய் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வராது. அழகுசாதன பொருட்களின் தயாரிப்பில் நெல்லிக்கனிக்கும் இடம் உள்ளது. நெல்லிக்கனிக்குள் இருக்கும் கொட்டையை பொடியாக்கி தேங்காய் எண்ணெயில் கலந்து கொதிக்க வைத்து, அக்கலவை குளிர்ந்ததும் தலையில் தேய்த்து வந்தால் தலை முடி பளபளப்பாக மாறும். முடிக்கு உரித்தான கருமை நிறம் மற்றும் அடர்த்தி கிடைக்கும்.
Tamil online news Today News in Tamil
English Summary
Benefits of Nellikaai or Malai Nellikai Health Tips