பெரும் அதிர்ச்சி! பாலியல் வன்கொடுமை வழக்கில் காங்கிரஸ் எம்பி கைது!
UP Congress MP Arrested
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ராகேஷ் ரதோர், பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ராகேஷ் கடந்த நான்கு வருடங்களாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 17-ம் தேதி பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார்.
மேலும், தன்னை திருமணம் செய்து கொள்வதாகவும், அரசியலில் பெருந்தலைவராக தன்னை உருவாக்கி தருவதாகவும் ராகேஷ் வாக்குறுதி அளித்ததாக அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
இருவரும் போனில் பேசிய ஆதாரங்களையும் புகாருடன் ஒப்படைத்து இருந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவந்த நிலையில், பாதிக்கப்பட்ட அந்த பெண் மீண்டும் ஒரு புகாரை கொடுத்தார்.
அதில், தன்னை வழக்கை திரும்ப பெற காங்கிரஸ் எம்பி ராகேஷ் வற்புறுத்தியதாக தெரிவிக்க இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க தொடங்கியது.
இதற்கிடையே, ராகேஷ் ரதோரின் முன்ஜாமீன் மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதனையடுத்து, இன்று போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
தற்போது காங்கிரஸ் எம்பி-யாக உள்ள ராகேஷ் இதற்க்கு முன் பகுஜன் சமாஜ் கட்சியிலும், பாஜக சார்பிலும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.