நாளை மறுநாள் முதல் ஆட்டோ கட்டணம் உயர்வு- ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் திட்டவட்டம்!
Auto fares to be hiked from tomorrow Auto drivers unions
நாளை மறுநாள் பிப்ரவரி 1ம் தேதி முதல் தமிழகத்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்போம் என ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை கடந்த 2013-இல் தமிழக அரசு மாற்றியமைத்தது. அதன்பின்பு தனிநபா் ஒருவா் தொடா்ந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2022 பிப்ரவரி மாதம் மீட்டா் கட்டணத்தை மாற்றியமைக்க உத்தரவிட்டது. இதையடுத்து பல கட்ட பேச்சு நடத்திய தமிழக அரசு, 2 ஆண்டுகளை கடந்த பிறகும் கட்டணம் உயா்த்தப்படவில்லை. இதனால் , 12 ஆண்டுகளாக மீட்டா் கட்டணம் உயா்த்தப்படாமல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது .
மேலும் இது தொடா்பாக கடந்தாண்டு மாா்ச் மாதம் ஆட்டோ ஓட்டுநா்களுடன் போக்குவரத்துத் துறை ஆலோசனை நடத்தி, கட்டணம் தொடா்பான பரிந்துரைகளையும் பெற்றது. ஆனால், இதுவரை கட்டணத்தை இறுதி செய்யவில்லை.
இச்சூழலில், பிப்.1 முதல் புதிய கட்டணம் வசூலிக்கப்படும் என ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத்தினா் அறிவித்திருந்தனா்.தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்தக் கூடாது என போக்குவரத்து ஆணையர் எச்சரித்திருந்த நிலையில் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் இன்று கூட்டாக அறிவித்துள்ளனர்.
ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிலையில் அவற்றின் மீது அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் புகார் தெரிவித்துள்ளது.
மேலும் ஆட்டோ தொழிற்சங்கத்தினரை போக்குவரத்து துறை அமைச்சர் அழைத்து பேசி கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் அழைத்து பேசாவிட்டால் திட்டமிட்டபடி பிப்ரவரி 1ம் தேதி ஆட்டோ கட்டணங்களை உயர்த்தியே வசூலிப்போம் என ஓட்டுநர் சங்கங்கள்அறிவித்துள்ளது.
English Summary
Auto fares to be hiked from tomorrow Auto drivers unions