நீரிழிவு நோயை குணப்படுத்தும் தண்ணீர் விட்டான் கிழங்கு!! அதில் உள்ள அளப்பரிய மகத்துவங்கள்!!
benefits of thanneer vittan kizhangu
தண்ணீர்விட்டான் கிழங்கு இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. உடலைப் பலமாக்கும்; உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும்; தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்; ஆண்மையை அதிகரிக்கச் செய்யும்.
உடல் பலம் பெற தண்ணீர் விட்டான் கிழங்கைச் சேகரித்து, நீரில் கழுவி, மேல் தோல் நீக்கி, காயவைத்து தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூள் இரண்டு கிராம் அளவு, பசு நெய்யில் கலந்து, தினமும் காலை, மாலை இரண்டு வேளைகள் சாப்பிட்டுவர வேண்டும்.
ஆண்மை பெருக தண்ணீர் விட்டான் கிழங்கைக் காயவைத்து, தூள் செய்துகொண்டு, வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம், தினமும் இரண்டு வேளைகள், ஒரு மாதம் வரை தொடர்ந்து சாப்பிட்டு, ஒரு டம்ளர் பால் குடித்து வர வேண்டும்.
![](https://img.seithipunal.com/media/sedgdfg-arsqp.png)
மாதவிடாயின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த நான்கு தேக்கரண்டி அளவு தண்ணீர் விட்டான் கிழங்கு சாற்றுடன், 2 தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து பருக வேண்டும். தினமும் மூன்று வேளைகள், 5 நாட்களுக்குச் செய்ய வேண்டும்.
கால் எரிச்சலைக் கட்டுப்படுத்த தண்ணீர் விட்டான் கிழங்கிலிருந்து சாறு எடுத்து, காலையிலும், படுக்கைக்குப் போகும் முன்பும், காலிலும், பாதத்திலும் பூச வேண்டும். குணமாகும் வரை சிகிச்சையைத் தொடரலாம்.
பசுமையான தண்ணீர் விட்டான் கிழங்குகளைக் கழுவி, தோல் நீக்கி, இடித்து, சாறு எடுக்க வேண்டும். ஒரு கோப்பை சாற்றுடன் ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து காலையில் பருக வேண்டும். 3 முதல் 7 நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிடலாம். இது ஒரு பல்நோக்கு ஆரோக்கிய மருந்தாகும். இதனால், இளைத்த உடல் பெருக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்குப் பால் சுரப்பு அதிகமாகும், நீர்ச்சுருக்கு, நீர்க்கட்டு, வயிற்று எரிச்சல் ஆகியவையும் குணமாகும்
பெண்களுக்கு இந்த கிழங்கு ஒரு வரப்பிர சாதம். பருவம் அடைந்த காலத்தில் இருந்து, மாதவிடாய் முழுமையாக நிற்கும் மனோபாஸ் காலம் வரை பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு வகையான நோய்களை குணப்படுத்தி, அவர்களது உடலுக்கு சிறந்த ஆரோக்கியத்தை தரும் சக்தி தண்ணீர்விட்டான் கிழங்குக்கு இருக்கிறது. இதற்கு சாதாவேரி, சதாமூலம் ஆகிய இருவேறு பெயர்களும் உண்டு.
இன்று பெரும்பாலான இளம்பெண்கள் சினைப்பை நீர் கட்டியால் பாதிக்கப்படு கிறார்கள். அதனால் கருமுட்டை உற்பத்தி பாதிக்கப்படுகிறது. கருமுட்டை உற்பத்தியை பெருக்கும் சக்தி தண்ணீர்விட்டான் கிழங்குக்கு இருக்கிறது.
![](https://img.seithipunal.com/media/ojhntij-grgr7.jpeg)
பருவமடைந்த பெண்களில் சிலர் உடல்மெலிந்து ரத்தசோகையுடன் காணப்படு கிறார்கள். அதனால் வெள்ளைப்படுதல் தோன்றும். உடலின் உள்பகுதி சூடாகத்தோன்றும். தலைமுடி உதிரும். மார்பக வளர்ச்சியில்லாமல் ஆரோக்கிய குறைபாடு கொண்டவர்களாகவும் தோன்றுவார்கள். இவர்களுக்கு தண்ணீர்விட்டான் கிழங்கு சேர்ந்த மருந்துகள் கொடுத்தால் ஆரோக்கியம் மேம்படும். அதனால் மார்பக வளர்ச்சியும் மேம்படும். பெண்கள் சுறுசுறுப்பாக செயல்படவும் இது உதவும்.
கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு கொடுக்கப்படும் மருந்துகள் ரத்த விருத்திக்கு உதவக்கூடியதாகவும், உடல் பலத்தை அதிகரிக்கக்கூடியதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கக் கூடியதாகவும், கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். இவை அனைத்தையும் வழங்கக்கூடியது, தண்ணீர்விட்டான் கிழங்கு.
English Summary
benefits of thanneer vittan kizhangu