வெறும் 7 நாட்களில் சிறுநீரக கற்களை கரைக்கும் அற்புத மூலிகை.! - Seithipunal
Seithipunal


யானை நெருஞ்சில் செடியை பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காட்டுப் பகுதியில் காணப்படும் யானை நெருஞ்சில் பல்வேறு நோய்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

நெருஞ்சில் மூலிகை மூன்று வகைகளாக உள்ளது. அதன்படி சிறு நெருஞ்சில், செப்பு நெருஞ்சில் மற்றும் யானை நெருஞ்சில். இதில், யானை நெருஞ்சில் நன்மைகள் குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்.

யானை நெருஞ்சில் சிறுநீரக கற்களை கரைக்க சிறந்த மருந்தக பயன்படுகிறது. சிறிய முதல் பெரிய கற்களையும் அறுவை சிகிச்சை இல்லாமல் எளிதாக கரைக்க யானை நெருஞ்சிலை பயன்படுத்தலாம். அதிகபட்சமாக 18 மில்லி மீட்டர் அளவுள்ள கற்களை கரைக்கலாம். இதில் பெரிய கற்களை கரைக்க குறைந்தது 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

யானை நெருஞ்சில் செடியில் ஒரு கொத்து அல்லது 10 இலைகளை பறித்து கசக்கி அரை லிட்டர் தண்ணீரில் ஓட்டு நன்றாக கலந்து வைக்க வேண்டும். சிறிது நேரத்தில் அந்த தண்ணீர் என்னை போல் மாறிவிடும்.

இந்த தண்ணீரை மறுநாள் காலை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு தினமும் குடித்து வந்தால் சிறிய அளவிலான கல்லாக இருந்தால் வெறும் 7 நாட்களில் கரைந்து விடும். பெரிய கல்லாக இருந்தால் குறைந்தபட்சம் 21 நாட்கள் குடிக்க வேண்டும்.

குறிப்பாக இந்த மருந்தை எடுத்துக் கொள்வதற்கு முன்பு ஸ்கேன் செய்து கல்லின் அளவுக்கு ஏற்ப 7 நாட்களோ அல்லது அதற்கு அதிகமான நாட்களோ குடித்து மீண்டும் ஸ்கேன் செய்து பார்த்துக் கொள்ளலாம்.

அதேபோல் யானை நெருஞ்சில் இலையை தண்ணீருக்கு பதிலாக பழைய சோற்று நீர் அல்லது மோரில் கலந்து வடிகட்டி குடிக்கலாம். மேலும் யானை நெருஞ்சில் நிலையை இளநீரில் கலந்து அரை மணி நேரம் கழித்து வடிகட்டி குடிக்கலாம்.

யானை நெருஞ்சில் மூலிகை சிறுநீரக கற்களை கரைப்பதற்கு மட்டுமில்லாமல் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்களுக்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. டயாலிசிஸ் செய்பவர்கள் யானை நெருஞ்சிலை உட்கொண்டு வந்தால் சிறுநீரகம் நாளுக்கு நாள் சீராகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Benefits yanai nerunjil


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->