பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி! முதல் நாளில் குறைந்த எண்ணிக்கையிலான மக்களே தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.! - Seithipunal
Seithipunal


பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியின் முதல் நாளான நேற்று மிக குறைந்த எண்ணிக்கையிலான மக்களே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட 18 வயதை கடந்தவர்கள் ஒன்பது மா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி நேற்று முதல் போட்டுக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்தது. முதல் நாளான நேற்று தமிழகத்தில் 10 ஆயிரம் பேருக்கு குறைவானவர்களே பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.

மக்கள் இன்னும் அதிக ஆர்வத்துடன் வந்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என அரசு எதிர்பார்க்கிறது.

தனியார் மருத்துவமனைகள் உட்பட 850 மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கிய நிலையில், இன்று முதல் முழு வீச்சில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Booster dose vaccination started


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->