சளி, ஜீரண மண்டல பாதிப்பு உள்ளிட்ட 90 மருந்துகள் தரமற்றவை - மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


சளி, வைட்டமின் குறைபாடு, ஜீரண மண்டல பாதிப்பு உள்ளிட்ட 90 மருந்துகள் தரமற்றவையாக இருப்பது மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து மருந்துகள் மற்றும் மாத்திரைகள் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்களால் ஆய்வு செய்யப்படுகின்றன. 

இந்த ஆய்வுகளின் போது, போலி மற்றும் தரமற்ற மருந்துகள் அடையாளம் காணப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கடந்த மாதத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் கிருமி தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு, சளித் தொற்று, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்படும் 90 மருந்துகள் தரமற்றவையாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இந்த விவரங்கள் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://cdsco.gov.in/-ல் வெளியிடப்பட்டுள்ளன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Govt Drugs


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->