ஜெர்மனி தேர்தல்; தோல்வியை ஒப்புக்கொண்ட அதிபர் ஒலாப் ஸ்கால்ஸ்..!
Chancellor Olaf Scholz admits defeat in the German presidential election
ஜெர்மனியில் இன்று பொது தேர்தல் நடைபெற்றது. அதிபர் ஒலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி ஜெர்மனியில் ஆட்சி செய்து வருகிறது. கடந்த நவம்பர் மாதத்தில் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவரான நிதி அமைச்சரை அதிபர் ஸ்கால்ஸ் திடீரென பதவி நீக்கம் செய்தார். இதனை தொடர்ந்து,அங்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் பில் ஸ்கால்ஸ் அரசு தோல்வியுற்றது.
அதனை தொடர்ந்து, அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் அதிபர் ஒலாப் ஸ்கால்ஸ், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் சார்பில் பிரெட்ரிக் மெர்ஸ், ஏ.எப்.டி. சார்பில் ஆலீஸ் வீடெல் ஆகியோர் மோதினர்.

இதற்கிடையே, எதிர்க்கட்சி தலைவரான பிரெட்ரிக் மெர்ஸ் அதிபர் ஆவதற்கே வாய்ப்புள்ளது என்றும், அவரது கட்சி முன்னிலையில் இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், ஆலீஸ் வீடெலின் ஏ.எப்.டி. இரண்டாவது இடம் பிடித்துள்ளது.
உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க் ஏ.எப்.டி. கட்சிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களிலும், வீடியோ மூலமாகவும் பிரசாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அதிபர் ஸ்கால்ஸ் கடுமையாக எதிர்த்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஜெர்மனி தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன் எனக்கூறி தோல்வியை அதிபர் ஒலாப் ஸ்கால்ஸ் ஒப்புக் கொண்டுள்ளார்.
English Summary
Chancellor Olaf Scholz admits defeat in the German presidential election