காதலிக்கு புதிய காதலன்; நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்த முன்னாள் காதலன்..! - Seithipunal
Seithipunal


முன்னாள் காதலிக்கு புது காதலருடன் தொடர்பு ஏற்பட்டதால் ஆத்திரத்தில் அந்த பெண்ணை முன்னாள் காதலன் கூட்டு பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிராவில் பிவாண்டி நகரை சேர்ந்த 22 வயது இளம்பெண் பல ஆண்டுகளாக வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண்ணுக்கு அந்த காதல் கசிந்துள்ளது. காதலனை விட்டு பிரிந்த அந்த பெண்ணுக்கு வேறொரு நபருடன்  காதல் ஏற்பட்டுள்ளது.

இந்த விவரம் முன்னாள் காதலனுக்கு தெரிய வ அவர்  ஆத்திரமடைந்துள்ளார். இதனால், காதலியை பழிவாங்க சதி திட்டம் தீட்டியியுள்ளார்.

இதன்படி, கடந்த 19-ந்தேதி இரவு காதலியின் சகோதரரை கடத்திய முன்னாள் காதலன், அவரை வைத்து, காதலியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, சம்பவ இடத்திற்கு வரவழைத்துள்ளார். அந்த இளம்பெண் அங்கு வந்ததும் பெண்ணையும், அவருடைய சகோதரரையும் நண்பர்களுடன் சேர்ந்து முன்னாள் காதலன் அடித்து, தாக்கியிருக்கிறார். அத்துடன் அந்த பெண்ணை அழைத்து வந்த ஆட்டோ ஓட்டுநரையும் அடித்துள்ளனர்.

மேலும், நகாவன் பகுதியில் பள்ளி ஒன்றின் அருகே அந்த குற்றவாளி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை தொடர்ந்து, பாத்திமா நகரில் உள்ள வேன் ஒன்றின் உள்ளே அவரை வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளதோடு, தனது நண்பர்களுடன் சேர்ந்தும் கூட்டு பலாத்காரம் செய்துள்ளார்.

அவர்களிடம் இருந்து தப்பிய அந்த இளம்பெண், பிவாண்டி போலீசில் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து, புதிய குற்றவியல் சட்டத்தின் பலாத்காரம், கூட்டு பலாத்காரம் மற்றும் பிற குற்றங்களுடன் தொடர்புடைய பல்வேறு பிரிவுகளின் கீழ் முன்னாள் காதலன் உள்பட 06 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதோடு, அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ex boyfriend gang raped his girlfriend along with his friends


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->