உஷார்.! உங்கள் காலை உணவு இதுவா.? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.!
do not eat poori for morning time
பலரும் அன்றாடம் காலை பூரியை விருப்ப உணவாக எடுத்துக் கொள்வது வழக்கம். அவர்களுக்கு மருத்துவர்கள் ஒரு முக்கிய அறிவுரையை கொடுத்துள்ளனர். அன்றாடம் காலை 6 மணிக்கு எழுந்து வீட்டு வேலைகளை முடித்துவிட்டு அன்றைய பணிகளை கவனிக்க அவசர அவசரமாக ஓடுகின்றோம்.
வீட்டில் குழந்தைகள் இருந்தால் அவர்களை பள்ளிக்கு அனுப்புவதில் பெரும் சிரமம் இருக்கிறது. எனவே, அவர்களுக்கு காலை உணவாக அவசரகதியில் எளிமையான உணவுகளை செய்து கொடுக்கிறோம். அப்படி காலையில் பூரி மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்டவற்றை பல பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர்.
அவசர கதியில் கடைகளில் விற்கும் பூரிகளை கூட சாப்பிட்டு விட்டு குழந்தைகளுக்கும் கொடுத்து விடுகின்றனர். பூரி போன்ற எண்ணெய் பண்டத்தில் செய்யப்பட்ட உணவுகளை காலை நேரத்தில் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
காலையில் இதுபோன்ற உணவுகளை எடுத்துக் கொள்வதால் அன்று நாள் முழுவதும் உடல் மந்தத்துடன் இருக்கும். செரிமானம் குறித்த பிரச்சினைகளும் ஏற்படும். எனவே, காலை நேரத்தில் எளிதில் செரிக்க கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சாப்பிடுவதற்கு முன்பு சற்று சூடான நீரை குடிப்பது செரிமானத்தை இலகுவாக்கும்.
English Summary
do not eat poori for morning time