2 சாறுகள் உங்கள் தோற்றத்தை மாற்றும், சருமம் பளப்பாக இதை அருந்துங்கள் !!
drink these to get glowing skin
நமது தினசரி உணவு பழக்கத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அதன் தாக்கம் முதலில் நம் தோலில்தான் தெரியும். அதற்காக நம் முகத்தை கூடிய விரைவில் சரிசெய்ய நாம் ஒரு தீர்வை தேடுகிறோம். இந்த கோடை காலத்தில் பல பேர் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை. தங்கள் சருமம் பொலிவிழந்து பளபளப்பாக இருக்க வேண்டும் என்று யாரும் விரும்ப மாட்டார்கள்.
ஒரு சிலர் பல மருந்துகளை முயற்சித்தாலும், நமது தோலில் ஒரு மந்தமான நிலை நீடிக்கிறது. நீங்களும் இது போன்ற பிரச்சனைகளில் உள்ளீர்களா? உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க வழிகளை தேடுவீர்கள். அதற்காக உங்களுக்கு உதவும் புதினா மற்றும் எலுமிச்சை சாறு செய்முறை உள்ளது. இந்த சாறு தயாரிப்பது மிகவும் எளிதானது மற்றும் உங்கள் சருமத்திற்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்கும்.
இந்த கோடை வெயிலின் வெப்ப அலையால் சுட்டெரிக்கும் வெப்பத்தில் இருந்து விடுபட இந்த சாறு அருந்துவது உடல் நலத்திற்கு நல்லது. மேலும் அந்த சாறு தயாரிக்க எளிதானவை, ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை மற்றும் உள்ளிருந்து உடனடியாக நம் உடலை உஷ்ணத்தில் இருந்து குளிர்விக்கும். புதினா மற்றும் எலுமிச்சை சாறு அது மட்டுமல்லாமல் நமது சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது.
முகத்தில் பருவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதினா ஒரு சிறந்த மருந்து. பொதுவாக புதினா இலைகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் சாலிசிலிக் அமிலம் மிகுந்து உள்ளது. தினமும் புதினாவை உணவில் சேர்த்துக் கொண்டால் முகப்பருக்கள் குறைந்து சருமத்திற்கு இயற்கையான பொலிவு கிடைக்கும். இந்த புதினாவை சாறு எடுத்து குடிக்கலாம் மேலும் புதினாவை அரைத்து நேரடியாக சருமத்தில் தடவலாம்.
எலுமிச்சை பழம் தோல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று. வைட்டமின்களில் ஒன்றான வைட்டமின் சியின் ஆற்றல் இதில் அதிகம் உள்ளது. மேலும் எலுமிச்சை பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ளது, இது நமது தோலில் உள்ள இறந்த சரும செல்களை நீக்க உதவுகிறது. எலுமிச்சை சாறு முகத்திலும் மற்றும் உடம்பிலும் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் முகப்பரு போன்ற சரும பிரச்சனைகளை தடுக்க உதவும்.
உங்கள் வீட்டிலேயே வீட்டில் புதினா மற்றும் எலுமிச்சை சாறு தயாரிப்பது மிகவும் எளிது. இதை செய்ய, புதினா இலைகள், கருப்பு உப்பு, எலுமிச்சை சாறு, தேன், பெருஞ்சீரகம் ஆகியவற்றை மிக்சி கிரைண்டரில் சேர்த்து அரைக்கவும்.
பின்னர் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து, ஒரு பாத்திரத்தில் வெள்ளரி துண்டுகள் மற்றும் துளசியுடன் ஐஸ் கட்டிகள் சேர்க்கவும். மேலும் இதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து தினமும் பருகினால் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்துவதுடன் சருமத்திர்ற்கு மிகவும் நல்லது.
English Summary
drink these to get glowing skin