காலையில் எழுந்ததும் இது நடக்குதா.? உஷார் ஆஸ்துமாவாக இருக்கலாம்.!
Frequent sneezing may be Symptom of Ashthma
மகிழ்ச்சியான தருணங்களில் ஒருவருக்கு தும்மல் வந்தாலே அபசகுணம் என்று இந்தியாவில் இருக்கும் பெருவாரியான மக்கள் நினைக்கிறார்கள். இந்த தும்மல் எதனால் ஏற்படுகிறது? சுவாசிக்கும் காற்றில் தூசு துகள்கள் நுண் கிருமிகளை நாம் அறியாமலே நம் மூக்கினுள் செல்லும்போது, மூளை கொடுத்திருக்கும் சமிஞ்ஞையின்படி மூக்கின் உள் பகுதியில் சளியை சுரக்கும்.
மேலும் நுரையீரலுக்கு அழுத்தம் கொடுத்து காற்றை வேகமாக வெளியேற்றி, தேவையில்லாத தூசுகளை அந்த சளியையும் காற்றுடன் கலந்து வெளியேற வைப்பது தான் மூக்கின் வேலை இந்த செயல் கணநேரத்தில் அனிச்சை செயலாகச் செய்யப்படுவது தான் தான் தும்மல் எனப்படுகிறது.
பொதுவாக தொடர் தும்மல்கள் இரண்டு வகையான காரணங்களால் ஏற்படுகின்றன.
அலர்ஜியினால் ஏற்படுகின்ற நாசியழற்சி. மற்றொன்று அலர்ஜி அல்லாத நாசியழற்சி ஆகும். அலர்ஜியினால் ஏற்படுகின்ற நாசியழற்சி, நமக்கு ஒவ்வாமை ஏற்படும் போது, நமது உடல் செய்கின்ற எதிர்வினையாகும். இது தும்மல் எரிச்சல் தொண்டைப்புண், மூக்கு அரிப்பு ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.
இந்த ஒவ்வாமையானது பூக்களின் மகரந்தங்கள், நாம் வளர்க்கும் செல்லப் பிராணிகளின் தோல், மற்றும் முடி, சிறு பூச்சிகள் ஆகியவற்றின் துகள்கள் நம் நாசிக்குள் செல்வதால் ஏற்படுவதாகும்.
அலர்ஜி அல்லாத நாசியழற்சி என்பது இதில் மூக்கில் இருந்து நீர் ஒழுகுதல் அதிகமாக இருக்கும். குழந்தைகளிடம் இந்த பிரச்சினை அதிகமாக காணப்பட்டாலும் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.
இது போன்ற நாசியழற்சி சில நேரங்களில் நம் நுரையீரலில் தொற்றுக்களை ஏற்படுத்தும். பொதுவாக தும்மல் என்பது நம் நுரையீரலுக்கு வெளிப்பொருட்களையும் கிருமிகளையும் விடாமல் தடுப்பதுதான். ஆனாலும் சில கிருமிகள் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக இருப்பதன் காரணமாக நம் உடலுக்குள் சென்று நுரையீரல்களில் தொற்றை ஏற்படுத்தும். இவற்றில் அலர்ஜி சார்ந்த தும்மல் ஆஸ்துமாவை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
நமது நுரையீரலில் ஏற்படுகின்ற தொற்றின் காரணமாக சுவாச பாதையானது, அதிகமான சளியினால் அடைக்கப்பட்டு சுவாசிப்பதற்கு சிரமத்தை ஏற்படுத்தும், இதுதான் ஆஸ்துமா என்று கூறப்படுகிறது. இது பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும் புகைப்பிடிப்பவர்களுக்கும் புகைப்பிடிப்பவர்களின் அருகில் இருப்பவர்களுக்கும் அதிகமாக ஏற்படும்.
கண் வலி, கண்களில் நீர் வழிதல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் காலையில் அடுக்கு தும்மல் இருப்பவர்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரை சென்று ஆலோசிப்பது நலம். ஒவ்வாமை ஏற்படுத்தக் கூடிய இடங்களை அல்லது பொருட்களை தவிர்ப்பதன் மூலம் இந்த அடுக்கு தும்மலை கட்டுப்படுத்தலாம்.
English Summary
Frequent sneezing may be Symptom of Ashthma