2026 -இல் கூட்டணி ஆட்சி அமைவதற்கான சூழல் இல்லை - திருமாவளவன் பரபரப்பு பேச்சு..! - Seithipunal
Seithipunal


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "விடுதலை சிறுத்தை கட்சியினர் உட்கட்சி விவகாரங்களை சமூக வலை தளங்களில் வெளியிட வேண்டாம். இதனால் கட்சி வளர்ச்சிக்கு தடை ஏற்படுகிறது. இந்தக் கட்சி அனைத்து விளிம்பு நிலை மக்களுக்காக போராடும் சமூக பண்பாட்டு தளத்தை இயக்கும் ஒரு இயக்கமாக உள்ளது.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று தி.மு.க. அல்லது அ.தி.மு.க. சொல்கிறது என்றால், அது நடைமுறைக்கு சாத்தியமான ஒன்று. 2026-ல் வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைவதற்கான சூழல் இல்லை. இப்போது தான் கூட்டணி தொடக்கப் புள்ளியாக உள்ளது. 

அ.தி.மு.க. கூட்டணி அமைப்பதாக அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை. கட்சியில் விவாதித்தார்களா? என்ற தகவல் இல்லை. யூகத்தின் அடிப்படையில் எதையும் சொல்லிவிட முடியாது. விசிக - தி.மு.க. கூட்டணி இணைந்து செயல்பட்டு உள்ளது. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை உருவாக்கியதிலும், இந்தியா கூட்டணியை உருவாக்கியதிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பங்கு உண்டு. 

அந்த கூட்டணியை மாநில அளவிலும், தேசிய அளவிலும் பாதுகாப்பதும், வலுப்படுத்துவதும் விடுதலை சிறுத்தைகளின் நோக்கம் மற்றும் கடமைகளுள் ஒன்று. எங்கள் கட்சி தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறாது. ஆனால், வெளியேறுவது போன்ற தோற்றத்தை சிலர் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள்" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vck leader thirumavalavan say no chance of coalition government in 2026


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->