குழந்தையின்மை பிரச்சினையை குணமாக்கும் அருமருந்து 'வெந்தய நீர்' - இதை தினமும் எப்படி குடிக்க வேண்டும் தெரியுமா?! - Seithipunal
Seithipunal


உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடிய வெந்தயம், அனைவரது வீட்டிலும் எப்போதும் சாதாரணமாக இடம் பெற்றிருக்கக் கூடிய ஒரு உணவுப் பொருள் ஆகும். இதில் இரும்பு, கால்சியம், மெக்னீசியம், வைட்டமின்கள் என பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 

பொதுவாக வெந்தயத்தை அப்படியே சாப்பிடுவதை விட, அதை ஊற வைத்து சாப்பிடுவது தான் அதிக பலன்களைக் கொடுக்கும். இரவு ஒரு கைப்பிடி அளவு வெந்தயத்தை ஊற வைத்து, அதை மறுநாள் காலையில்  குடித்தால் பல்வேறு நன்மைகளைக் கொடுக்கும். ஆனால் இதில் குளிர்ச்சித் தன்மை நிறைந்துள்ளதால் அளவோடு தான் எடுத்துக் கொள்ள வேண்டும். 

தினமும் வெந்தயம் ஊற வைத்த நீரைக் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் :

* தினமும் வெந்தயம் ஊற வைத்த நீரை குடிப்பதால் நெஞ்செரிச்சல் குணமாவதோடு, இரைப்பையில் ஏற்படும் குடல் அழற்சியைப் போக்கும்.

* வெந்தயத்தில் நிறைந்துள்ள எண்ணெய்கள் மற்றும் பொட்டாசியம், கரோட்டின், வைட்டமின் சி ஆகியவை சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மையை அதிகரிப்பதோடு சருமத்தை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவுகின்றன. 

* வெந்தயம் ஊற வைத்த நீரில், நார்ச்சத்து நிறைந்துள்ளதால், இது பசியை அடக்கி எடை இழப்பை ஊக்குவிக்கிறது. 

* டெஸ்டோஸ்டிரோன் குறைபாடு உள்ளவர்கள் தினமும் வெந்தயம் ஊற வைத்த நீரை குடித்து வர, டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிப்பதோடு, விந்தணு எண்ணிக்கையும் அதிகரிக்கும். 

* நீரிழிவு நோயாளிகள் ஒரு நாளைக்கு காலை, மாலை என 2 முறை வெந்தய நீரை அருந்தலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Health Benefits Of Fenugreek Soaked Water


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->