உடலுக்கு நன்மையை வழங்கும் கொய்யா இலை தேநீர் செய்வது எப்படி.!!
how to make koiya ilai theneer or Guava leaf tea in home
கொய்யா பழத்தை சாப்பிட்டு வந்தால் நமது உடலுக்கு கிடைக்கும் அளப்பரிய நன்மைகள் குறித்து நாம் அறிவோம்.
கொய்யா மரத்தில் இருக்கும் கொய்யா இலைகளை தேநீர் வடிவில் அருந்தி வந்தால் நமது உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் அனைத்தும் நீக்கப்பட்டு., நமது உடலானது பாதுகாக்கப்டுகிறது.
கொய்யா இலை தேநீர் செய்ய தேவையான பொருட்கள்:
கொய்யா இலை - 5 எண்ணம் (Nos).,
தேயிலை தூள் - அரை தே.கரண்டி.,
தண்ணீர் - 2 கிண்ணம்.,
ஏலக்காய் - 2 எண்ணம்.,
நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி - தே.அளவு.....
கொய்யா இலை தேநீர் செய்முறை:
பாத்திரம் ஒன்றை எடுத்துக்கொண்டு இரண்டு கிண்ணம் தண்ணீரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.
தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் தேயிலை தூள்., கொய்யா இலை மற்றும் ஏலக்காயை போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும்.
இவை அனைத்தும் நன்றாக கொதித்த பின்னர் கருப்பட்டியை சேர்த்து பின்னர் வடிகட்டி இளம் சூட்டுடன் பருக வேண்டும். இதனை மூன்று மாதங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் உடலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
English Summary
how to make koiya ilai theneer or Guava leaf tea in home