வேப்பம்பூவில் பொறியலா? வாங்க பார்க்கலாம்.! - Seithipunal
Seithipunal


மருத்துவ குணமிக்க மரமான வேப்ப மரத்தின் இலை முதல் காய் வரை அனைத்துமே பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இதில், வேப்பம்பூவில் இருந்து பொரியல் செய்யும் முறை குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்:

வேப்பம்பூ
சின்ன வெங்காயம் 
மிளகாய் தூள் 
மஞ்சள் தூள்
உப்பு
வெல்லம்
தேங்காய் 
கடுகு
உளுத்தம் பருப்பு
வரமிளகாய் 
கருவேப்பிலை

செய்முறை:-
 
முதலில் வேப்பம்பூவை தண்ணீரில் நன்கு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய்  ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு போட்டு பொரிய விட்டு, வர மிளகாய், சின்ன வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். 

பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு வதக்கி, இறுதியாக வேப்பம்பூ சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கிளறி விட வேண்டும்.  அதனுடன் வெல்லம் சிறிதளவு சேர்த்து கிளறிவிடவும். 

அதில், துருவிய தேங்காயையும் சேர்த்துக் கொள்ளவும். இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான வேப்பம்பூ பொரியல் தயார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare neem flower poriyal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->