உடலுக்கு நன்மையை வழங்கும் வாழையிலை குளியலை மேற்கொள்வது எப்படி?.!! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள காலகட்ட நிலையில் பல விதமான உடல் சோர்விற்கு மத்தியில் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டு வருகிறோம். இதன் காரணமாக நமது உடலானது தொடர்ந்து சோர்வை ஏற்படுத்தி., நமது உடல் மற்றும் உடல் உறுப்புக்கள் பல பிரச்சனைகளுக்கு உள்ளாகிறது. 

இந்த பிரச்சனையை எதிர்கொள்வதற்கு சில இயற்கை முறைகளை மேற்கொள்ளவதன் மூலமாக நமது உடலை பாதுகாக்கலாம். இயற்கையான முறையில் நமது உடலை பாதுகாக்க பல வழிகள் உள்ளது., அந்த வழிகளில் வாழையிலை குளியல் குறித்து இன்று காண்போம். 

இயற்கையான இந்த வாழை இலைகுளியலை செய்வதன் மூலமாக இறுதிக்கட்டத்தில் இருக்கும் உயிரை கூட மீட்டுவிடலாம் என்று சித்தர்கள் கூறுவார்கள். இந்த முறையில் வாழை இலையால் நமது உடலானது மறைக்கப்பட்டு., சுமார் ஒரு மணி நேர அளவிற்க்கு வெயிலில் இருப்பதே ஆகும். 

வாழை இலை குளியல் முறை: 

வாழை இலையானது இயற்கையான முறையில் விளையவைத்து., குறித்த நபரின் உருவம் மற்றும் உயரத்திற்கு ஏற்றார் போல இருக்கும் சுமார் எட்டு வாழை இலைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 

தரையில் ஆறு வாழை நாரை போட்டு., நூல் கயிறு அல்லது தென்னை கயிற்றை உபயோகம் செய்து அதன் மீது நபரை படுக்க வைத்து பின்னர் வாழை இலைகளை கட்ட துவங்க வேண்டும். 

இதற்கு முன்னதாக வாழை இலை குளியலை மேற்கொள்ள இருக்கும் நபரின் மீது காட்டன் துணியை நீரில் நடித்து உடலில் கட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் அந்த வாழை இலைகளை தலை முதல் கால் வரை தெரியாத அளவிற்கு நன்றாக கட்டிவிட வேண்டும். 

இந்த நேரத்தில் சுவாசத்திற்கு மட்டும் மூக்கு பகுதியின் மீது உள்ள வாழை இலைகளை வெட்டி வைத்து கொள்ள வேண்டும். பின்னர் வெயில் இருக்கும் இடத்தில் சுமார் ஒரு மணிநேரம் வைத்து விட வேண்டும். 

உடல் முழுவதும் வியர்வைகள் வெளியேறி இனிமேல் இந்த இடத்திற்குள் இருக்க முடியாத என்ற நிலை வந்தவுடன் கட்டுகளை அவிழ்த்து., பின்னர் வாழையிலை குளியல் மேற்கொண்ட நபரை நன்றாக சுவாசிக்க விட வேண்டும். பின்னர் தேன் கலந்த நீரை அருந்த கூறி வழங்கி., சுமார் 15 நிமி. கழித்த பின்னர் குளித்தால் உடலில் இருக்கும் கேட்ட நீர் அனைத்தும் வெளியேறி நமது உடலானது நலம் பெரும்.  

வாழையிலை குளியலை மேற்கொள்வதன் மூலமாக உடலுக்கு கிடைக்கும் விலைமதிப்பற்ற நன்மைகள்.!! தமிழனின் வைத்தியம்.!!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare vaalai ilai kuliyal in home


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->