இரவில் இந்த டீயை குடித்தால்.. உடல் எடை சரசரவென குறையும்.!  - Seithipunal
Seithipunal


லவங்கப்பட்டை டீ குடிப்பதால் நமது உடலில் வளர்ச்சிதை மாற்றம் அதிகரிக்கிறது. அதுபோல இந்த டீ வாயு பிரச்சனையை அகற்ற உதவும். 

அன்றாடம் இரவு உணவிற்கு அரை மணி நேரத்திற்கு பின் லவங்கப்பட்டை டீ குடிப்பது உடல் எடையை வேகமாக குறைக்க உதவும்.

இந்த டீ எப்படி தயாரிப்பது என பார்க்கலாம்

தேவையான பொருட்கள் : 

மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன் 
பட்டைத் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
தேன் - சிறிதளவு 
தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை :

தண்ணீரை ஒரு கப் அளவு எடுத்துக் கொண்டு நன்றாக கொதிக்க வைத்து அதில் மிளகுத்தூள் மற்றும் பட்டை தூளை சேர்க்கவும். மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள் வரை நன்றாக கொதிக்க விடவும். 

அதன் பின் மூடிவிட்டு அடுப்பை அணைத்து விடவும். சிறிது நேரம் கழித்து அதை வடிகட்டி குடிக்கலாம். முடிந்த அளவு இனிப்பு சேர்த்து குடிப்பதை தவிர்க்க வேண்டும். 

அதையும் மீறி இனிப்பு சுவை தேவைப்பட்டால் தேன் கலந்து கொள்ளலாம் இவ்வாறு குடிப்பதால் உடல் எடை குறையும்.

மேலும், இது உடலில் சளி, இருமல் பிரச்சனைகள் இல்லாமல் காக்கும் குளிருக்கும் இதமாக இருக்கக்கூடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lavangapattai Tea Preparation in Tamil


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->