அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய செவிலியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மேயர்.! - Seithipunal
Seithipunal


அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய செவிலியர் மற்றும் பணியாளர்களுக்கு மாநகராட்சி மேயர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

தேசிய தடுப்பூசி தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியில் 
அதிக எண்ணிக்கையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய நகர சுகாதார செவிலியர்கள், துணை செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் சிறப்பான பணியை பாராட்டி மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் இன்று நற்சான்றிதழ்களை வழங்கினார்.

தேசிய தடுப்பூசி தினத்தை முன்னிட்டு, இன்று ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சியில் 2022ம் ஆண்டில் அதிக எண்ணிக்கையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய நகர சுகாதார செவிலியர்கள், துணை செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களின் சிறப்பான பணியை பாராட்டி மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் நற்சான்றிதழ்களை வழங்கினார். 

இந்திய அரசின் தீவிர முயற்சிகளின் காரணமாக கடந்த 27 வருடங்களாக பெருநகர சென்னை மாநகராட்சியில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கடந்த 17 ஆண்டுகளாக போலியோ நோய் பாதிப்பு இல்லை. எனவே, உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை போலியோ நோயில்லாத நாடாக அறிவித்துள்ளது.

1995-ஆம் ஆண்டு போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் துவக்கப்பட்டது.  இந்த முகாம்கள் மூலம் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதுவரை 26 ஆண்டுகள் போலியோ சிறப்பு முகாம்கள் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த 27-ஆம் தேதி நடைபெற்ற 27வது முகாமில் ஐந்து வயதிற்குட்பட்ட  6,19,159 குழந்தைகள் பயனடைந்துள்ளார்கள். 

தேசிய தடுப்பூசி தினத்தை முன்னிட்டு, 2022ம் ஆண்டு தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து (IPPI) முகாமில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய நகர சுகாதார செவிலியர்கள் (UHN), துணை செவிலியர்கள் (ANM) மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் (AWW) ஆகியோரின் சிறப்பான பணியினை பாராட்டி இன்று நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ஒரு மண்டலத்திற்கு ( 1 UHN, 1  ANM, 1 AWW) 3 நபர்கள் வீதம்  45 பணியாளர்களுக்கு  இன்று நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் அரசு ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mayor congratulated nurses


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->