48 கோடி செலவில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ் - மத்திய அரசு அனுமதி.!!
central govt approved natural gas pipped to home
மத்திய அரசு சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், இறக்குமதி செலவை குறைப்பதற்காகவும், இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல், மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து சென்னையில் நீலாங்கரை, அடையாறு, திருவான்மியூர், சேப்பாக்கம், ராயபுரம், பாரிமுனை, தண்டயார்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் டோரண்ட் கேஸ் நிறுவனத்தால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
மொத்தம் 466 கி.மீ நீளத்திற்கு குழாய் அமைக்கப்படவுள்ளது. மொத்தம் 48 கோடி செலவில் இந்த திட்டத்தை செயல்படுத்த டோரண்ட் கேஸ் நிறுவனத்திற்கு தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
English Summary
central govt approved natural gas pipped to home