அதிமுக-பாஜக கூட்டணி: 10 செகண்டில் ஓ.பி.எஸ் ஏற்படுத்திய பரபரப்பு!
OPS ADMK BJP Alliance
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அதிமுக-பாஜக இடையிலான கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது. அமித் ஷா தமிழகம் வந்தபோது இரு தரப்பும் இணைப்பை உறுதி செய்ததாக கூறப்பட்டது.
மேலும், கூட்டணி ஆட்சி மட்டுமே, ஆட்சியில் பங்கீடு கிடையாது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கோவையில் உள்ள இயற்கை நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், சிகிச்சை முடித்து வீடு திரும்பினார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், "அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறுமா?" என கேள்வி எழுப்பினர். இதற்கு ஓ.பி.எஸ். சிரித்தவாறே, “இன்று விடுமுறை!” என குறும்பாக பதிலளித்து விலகினார்.
அதாவது, தான் மருத்துவ சிகிச்சைக்கு வந்துள்ளேன். கருத்து சொல்ல இன்று விடுமுறை என்று ஓபிஎஸ் தெரிவித்துவிட்டு சென்றார்.
இருப்பினும் ஓபிஎஸ் பதிலளிக்காமல் தவிர்த்து சென்றதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.