#IPL2024 தொடரிலிருந்து விலகும் முகமது ஷமி!
Muhammad Shami ruled out from ipl2024
நடப்பாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களின் மினி ஏலம் கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்று முடிந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா தற்போது மும்பை அணியின் கேப்டனாக செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் காரணமாக குஜராத் அணையின் கேப்டனாக தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கர் நியமிக்கப்படலாம் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் முக்கிய வீரர் ஒருவர் விலகி இருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது
குஜராத் டைட்டன்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் முகமது ஷமி எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளதால் ஐபிஎல் தொடரில் இருந்து ஷமி விலகுவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. முகமது ஷமி ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இருப்பது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
English Summary
Muhammad Shami ruled out from ipl2024