தலைவலியை போக்கும் முசுமுசுக்கை துவையல்.!
recipe of musumusukkai thuvaiyal
இருமல், சுவாச நோய்கள், காசம், தலைவலி, தலையில் நீர்க் கோர்த்தால் உண்டாகும் வலி, வறட்டு இருமல், தொண்டை வலி உள்ளிட்ட அனைத்திற்கும் முசுமுசுக்கை இல்லை ஒரு சிறந்த மருந்தாகிறது.
தேவையான பொருட்கள்:-
முசுமுசுக்கை இலை
இஞ்சி
கறிவேப்பிலை
கொத்தமல்லித் தழை
புளி
மிளகாய்வற்றல்
கறுப்பு உளுந்து
நல்லெண்ணெய்
உப்பு
செய்முறை:
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் புளி, மிளகாய் வற்றல், கருப்பு உளுந்து போட்டு வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் வெட்டி வைத்துள்ள இஞ்சி, முசுமுசுக்கை இலை, கொத்தமல்லித் தழை, கறி வேப்பிலையை சேர்த்து வதக்கி, சற்று ஆறிய பின்னர் உப்பு கலந்து மிக்சியில் அரைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான் சுவையான முசுமுசுக்கை துவையல் ரெடி.
English Summary
recipe of musumusukkai thuvaiyal