காலநிலை மாறுபாட்டால் தொண்டைப்புண்ணால் அவதிப்படுகிறீர்களா.? இப்படி முயற்சி செஞ்சு பாருங்க.!
remedies to get relief from throat pain due to the seasonal weather
மாறிவரும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தொண்டைப்புண் சளி மற்றும் இருமல் போன்றவற்றை மருத்துவமனைக்குச் செல்லாமல் நம் வீட்டிலேயே கை வைத்தியம் மூலம் எவ்வாறு குணப்படுத்தலாம் என்று பார்ப்போம். பொதுவாகவே நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை நிலவும் குளிரான வெப்பநிலையின் காரணமாக நம் அனைவருக்கும் தொண்டை புண் இருமல் ஜலதோஷம் போன்றவை அடிக்கடி ஏற்படும் இவற்றை நம் வீட்டில் உள்ள உணவுப் பொருட்களைக் கொண்டு எவ்வாறு குணப்படுத்தலாம் என்று பார்ப்போம்.
ஜலதோஷம் காரணமாக நமக்கு தொண்டையில் புண் இருந்தால் இதனை உப்பு நீரில் வாய்க்கழுவதன் மூலம் சரி செய்யலாம். உப்பு நீரானது ஒரு கிருமி நாசினியாக செயல்படும். இதன் காரணமாக தொண்டையில் இருக்கும் கிருமி தொற்றுகள் நீங்கி தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டைப்புண் போன்றவை குணமாகும். இதற்கு கால் லிட்டர் தண்ணீரில் கால் டீஸ்பூன் அல்லது அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இதுபோல் செய்வது தொண்டைக்கு இதமாக இருக்கும்.
பாக்டீரிய எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட சூடான பானங்களை அருந்துவதன் மூலமும் இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதோடு சளி மற்றும் ஜலதோஷம் போன்ற தொல்லைகளில் இருந்தும் விடுபடலாம். இதற்கு வெதுவெதுப்பான இஞ்சி சாரில் தேன் கலந்து பருகி வர இந்தப் பிரச்சனைக்கு நல்ல தீர்வாக அமையும். மேலும் இலவங்கப்பட்டை தேனீர் அருந்துவதன் மூலமும் இந்த பிரச்சனைகளை சரி செய்யலாம்
பூண்டு இவற்றிற்கு சரியான ஒரு மருந்தாகும் பச்சையான பூண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அவற்றை வெதுவெதுப்பான நீரில் இட்டு குடிப்பதன் மூலம் கிருமி தொற்றுகள் தடுக்கப்படும். இது தொண்டை புண் நீங்குவதற்கும் சளி தொல்லைகளுக்கும் மிகச் சிறந்த தீர்வாக பயன்படுகிறது.
குளிர் காலங்களில் ஏற்படும் தொண்டை அரிப்பு மற்றும் வலியாகிய வீட்டிற்கு எலுமிச்சைச் சாறில் தேன் கலந்து குடிப்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். எலுமிச்சை சாறில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கிறது. தேன் ஒரு சிறந்த மருந்தாக பயன்படக்கூடியது. இவை இரண்டும் கலந்து நல்ல ஒரு நிவாரணம் அளிக்கும்.
தொண்டைப்புண் குணமாக மூலிகை தேநீருடன் வினிகர் கலந்து குடிப்பது ஒரு சிறந்த மருந்தாகும் ஒரு கப் மூலிகை தேநீரில் கால் டீஸ்பூன் அளவு வினிகர் கலந்து குடித்து வர இது நமது தொண்டை புண் குணமாகவும் தொண்டை வலிக்கு மிகச் சிறந்த நிவாரணமாகவும் இருக்கும்.
English Summary
remedies to get relief from throat pain due to the seasonal weather