மன அழுத்தம் மற்றும் எதிர்மறை எண்ணங்கள் இருக்கின்றனவா? இந்த ஆசனம் உங்களுக்கு உதவும்..! - Seithipunal
Seithipunal


மன கவலைகளை நீக்கி புத்துணர்வாக வைத்து கொள்ள யோகாசனங்கள் உதவுகின்றன.

கவலைகள் இல்லாத மனிதனே இல்லை எனலாம். அனைவரும் ஏதோ ஒரு வகையில் கவலைகள் இருக்கதான் செய்கிறது. கவலைகள் நீங்கி மனம் புத்துணர்வாக யோகா நமக்கு உதவுகிறது. நீங்கள் கவலையில் இருக்கும் போது இந்த ஆசனத்தை செய்து வர உங்கள் மனம் புத்துணர்வாகும்.

அர்த்த சந்திரசனா (அரை நிலவு போஸ்):

அர்த்த சந்திரசனா என்பது மன கவலையை போக்க கூடிய ஒரு முக்கியமான யோகா ஆசனமாகும். இந்த ஆசனத்தை சரியாக செய்ய உங்கள் இடது காலை பின்னால் விட்டு வலது கால் பாதத்தை காலில் ஊன்றி கொண்டு அமரவும். இப்போது உங்கள் தலைக்கு மேல் கையை தூக்கும்போது முகத்தை மேல்நோக்கி தூக்கி கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் கணுக்கால் மற்றும் உங்கள் வலது முழங்காலை சீரமைக்கவும். இப்போது மேல் உடலை பின்னோக்கி வளைத்து உடலில் ஒரு வளைவை உருவாக்கவும். இந்த நிலை பார்க்க ஒரு அரை நிலவு போன்ற வடிவத்தை கொடுக்கும் .இப்போது இதே போல மறுப்புறமும் செய்யவும்.

ஆசனங்கள் மட்டுமின்றி பாடல்கள் போன்றவையும் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.மன அழுத்ததில் இருந்து வெளியே வர உங்களுக்கு பிடித்த செயல்களில் ஈடுபடுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stress-relieving yoga


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->