இது போன்ற அறிகுறிகள் உள்ளதா?! அப்போ உங்களுக்கு அது தான்!!
symptoms of manjal kamalai
நோயின் அறிகுறிகள்:
- அதிக சிகப்பு ரத்த அணுக்கள் அழிந்து, ரத்த சோகை ஏற்பட்டு பிலிரூபின் அதிகமாக காணப்படுவது.
- பித்த நீர் வரும் பாதையில் ஏற்படும் அடைப்பால் ஏற்படுவது, பித்த நீர் குழாயில் கல் அடைப்பு.
- கல்லீரல் பாதிக்கப்படுவது.
- சிறுநீர் மஞ்சளாக காணப்படுதல்.
- கண், நகம், நாக்கு போன்ற பகுதி மஞ்சள் நிறத்தில் காணப்படுவது.
- திடீர் எடை குறைவு. போன்ற காரணங்கள் இருந்தால் உங்களுக்கு மஞ்சள் காமாலை உள்ளதாக அர்த்தம் உடனடியாக மருத்துவரை பார்ப்பது நல்லது.
மஞ்சள் காமாலை வருவதற்கு மிக முக்கிய காரணம் தண்ணீர். சுகாதார மற்ற தண்ணீரினால் மஞ்சள் காமாலை நோய் அதிகரிக்கின்றது. மஞ்சள் காமாலை தாக்குதலுக்கு பல காரணங்கள் உண்டு. இது ஒரு பரவக் கூடிய நோயாகும்.
பல இடங்களில் குடிநீரில் குளோரின் நன்கு கலந்தே வழங்கப்படுகின்றது ஆனால் இதில் கழிவு நீர் கலக்கிறது. இதுவே பாதிப்பிற்கு முக்கிய காரணமாகின்றது. குடிநீரினை வடி கட்டி, காய்ச்சி குடிப்பது சிறந்த தீர்வு.
மஞ்சள் காமாலை நோய் வந்தால் முதலில் பாதிக்கப்படுவது கல்லீரல். இந்த நோய் உள்ளவர்கள் குடிப்பழக்கத்தினை தவிர்ப்பது உயிரை பாதுகாப்பதற்கு சமமானது.
கோடை காலங்களில் மஞ்சள் காமாலை அதிகம் காணப்படும். நீரினால் ஏற்படும் பாதிப்பில் மஞ்சள் காமாலை ஏ, ஈ, பிரிவு பாதிப்புகள் ஏற்படுகின்றன. பி, சி பிரிவு பாதிப்பு வகைகள் ரத்தம் கொடுத்தல், பாதிப்பு உடையோரின் ஊசியினை பயன்படுத்துதல் போன்றவை மூலமாக ஏற்படுகின்றன.
சிலருக்கு கடும் உடல் அரிப்பு இருக்கும். மஞ்சள் காமாலை என்றாலே கல்லீரல் பாதிப்பு இருக்கின்றதா என்று தான் பார்க்க வேண்டும். வைரஸ் பிரிவில் மட்டும் இது எளிதாய் பரவக் கூடியது. மேலும் சில வகை ரத்த சோகைகளாலும், டைபாய்ட், மலேரியா, டிபி பாதிப்புகளாலும் மஞ்சள் காமாலை ஏற்படும் வாய்ப்பு உண்டு.
காரணத்தை கொண்டே அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படுகின்றது. ஏ, ஈ, பி, டி, சி பிரிவுகளினால் கல்லீரல் பாதிப்பு இருக்கலாம். சிலருக்கு அதிக ஆல்கஹால் காரணமாக பாதிப்பு ஏற்படலாம். ஆங்கில முறை மருத்துவத்தில் மஞ்சள் காமாலை ஏ, பி, சி, டி என பிரிவுபடுத்தப்படு கின்றது.
வடிகட்டி கொதித்து ஆற வைத்த நீரினை பயன்படுத்துவது மக்களை பாதுகாக்கும். மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டால் அது எந்த பிரிவு என்பதனை மருத்துவ ஆலோசனை பெற்று அதன் படி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
மஞ்சள்காமாலை உள்ளவர்கள் மது அருந்தினால் உயிரிழக்க நேரிடும். கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை முடிந்த வரை கட்டுப்படுத்தி வருவது நல்லது. ரத்தம் கொடுப்பவர் தன்னை முறையாய் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். ரத்தம் பெறுபவரும் சுத்தமான ரத்தத்தினை பெற வேண்டும். முறையற்ற உடல் உறவுகளும் மஞ்சள் காமாலை பாதிப்பினை ஏற்படுத்தும்.
கீழாநெல்லி மஞ்சள்காமாலைக்கு சிறப்பு மருந்தாகும். கல்லீரல், கணையம் இவை இரண்டுமே கோடையில் வெப்பத்தினால் பாதிப்பு ஏற்படக் கூடியவைதான். இதனால் தான் மோர், எலுமிச்சை, இளநீர், தர்ப்பூசணி போன்ற பொருட்கள் அதிகம் பயன்படுத்த அறிவுறுத்தப்படு கின்றது. சோற்று கற்றாழை, கரிசலாங்கண்ணி இவை அனைத்து பிரிவு மருத்துவத்திலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
English Summary
symptoms of manjal kamalai