பற்களை இப்படி பராமரித்தால்.. உடைந்த பல்லை கூட சரிசெய்யலாம்.!
teeth maintaining ideas
பல்லில் சொத்தையானது கடுமையாக இருந்தால், ஒரு கட்டத்தில் பொடிப் பொடியாகப் பற்கள் உடைந்துவிட வாய்ப்புகள் அதிகம். அடுத்து, விபத்துகளின் மூலம் பல்லில் அடிபடுமானால் பல் உடையலாம்.
குழந்தைகள் கவனக் குறைவாக விளையாடும் போது பற்கள் உடைய வாய்ப்பு இருக்கிறது. சண்டை போடும் போது முகத்தைத் தாக்கினால் பற்கள் உடையும், இருட்டில் எங்காவது இடித்துக் கொள்ளும் போது கூடப் பற்கள் உடையக்கூடும். தெற்றுப் பற்கள் உள்ளவர்களுக்குச் சிறு விபத்து ஏற்பட்டாலும் பற்கள் உடைந்து விடும்.
என்ன செய்ய வேண்டும்?
பல்லில் அடிபட்டு முழு பல்லும் பெயர்ந்து விழுந்தாலும், பாதி பல் உடைந்தாலும், அந்தப் பல்லை ஒரு டம்ளர் பாலில் போட்டு மூடி, உடனடியாகப் பல் மருத்துவரிடம் அதைக் கொண்டு செல்லுங்கள். உடைந்த பல்லை மீண்டும் அதே இடத்தில் பொருத்தி விடலாம்.
பாதிப் பல் உடைந்துவிட்டால்?
பல்லின் உடைந்த பகுதியை ஒரு வகை சிமெண்ட் கொண்டு அடைப்பது, பல்லின் மேல் 'கேப்" போட்டு மூடுவது, பல் முழுவதையும் எடுத்துவிட்டு அந்த இடத்தில் 'இம்பிளான்ட் சிகிச்சை" மூலம் செயற்கை பல்லை பொருத்துவது என பல சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.