மாரடைப்பை தடுக்க எளிய பத்து வழிகள் - இதோ உங்களுக்காக.! - Seithipunal
Seithipunal


தற்போதைய காலத்தில் மாரடைப்பு மற்றும் இதய நோய் மனிதர்களை மிகவும் அச்சுறுத்தக் கூடிய ஒன்றாக இருக்கிறது. நன்றாக உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் நபர்கள் கூட 30-35 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு இறக்கின்றனர். இதனை தடுப்பதற்கான வழிகள் குறித்து இங்கு காண்போம்.

* தினமும் பூண்டு மற்றும் ஆளி விதைகளை  உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆயுர்வேத மருத்துவத்தின் படி இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் மாரடைப்பு அபாயத்தை குறைப்பதற்கும் இந்த விதைகள் பயன்படுகிறது .

* 30 வயதிற்குப் பிறகு, ஒவ்வொரு ஆண்டும் கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். லிப்பிட் ப்ரொபைல் மற்றும் hs-CRP ஐயும் சரிபார்க்க வேண்டும்.

* மாதுளை, அக்ரூட் பருப்புகள், பாதாம், ஆரஞ்சு, ப்ளாக்பெர்ரிகள், பச்சை இலைக் காய்கறிகள் போன்ற உணவுப் பொருட்களை வாரம் இரு முறை நமது டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* இதய நோய் ஆபத்துகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ள உணவில் இலவங்கப்பட்டை, மிளகு, மஞ்சள், இஞ்சி, பெருஞ்சீரகம், ஏலக்காய், கொத்தமல்லி போன்ற மசாலாப் பொருட்களைச் சேர்த்துக் கொள்ளவும்.

* 40 வயதிற்குப் பிறகு, கண்டிப்பாக ‘அர்ஜுனா’ மூலிகையிலிருந்து தயாரிக்கப்படும் மூலிகை தேநீரை உட்கொள்ளத் தொடங்குங்கள். இது உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

* தினமும் நடைபயிற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். நாள் முழுவதும் உட்கார்ந்து இருப்பது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். நம் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருப்பது அவசியம். புகை பிடிப்பதை போன்று ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பதும் மாரடை போடுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். தினமும் குறைந்தது 45 நிமிடங்கள் ஆவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

* மன அழுத்தம் இரத்த அழுத்தம் போன்றவை ட்ரைகிளிசரைடுகள் மற்றும் எல்.டி.எல்/கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கக்கூடும் என்பதால் மன அழுத்தம் மற்றும் ஸ்ட்ரெஸ் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* எண்ணெயில் வறுக்கப்பட்ட மற்றும் பொறித்த உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். நொறுக்கு தீனிகளை மாதம் ஒரு முறை அல்லது இரு முறை எடுத்துக் கொள்ளலாம். புகைப்படத்தை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.

* பிற்பகல் 2 மணிக்குப் பிறகு காஃபி குடிப்பதை தவிர்க்கவும். தூங்குவதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பு காஃபி குடிப்பது தூக்கக் கோளாறுகளை ஏற்படுத்தும்.

* உடல் எடை மற்றும் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதிகமான உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயத்தை ஏற்படுத்தும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ten tips of stop heart attack


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->