அதிக கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய்கள் வராமல் இருக்க, இந்த ஒரு பழத்தை தினமும் சாப்பிடுங்க !! - Seithipunal
Seithipunal


நமது உடலில் நல்ல மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் இரண்டு வகையான அடர்த்தி கொண்ட கொலஸ்ட்ரால் உள்ளது. நமக்கு உடலில் நல்ல கொலஸ்ட்ரால் இருப்பது மிகவும் அவசியம். நமது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் நேரத்தில், ​​பல நோய்கள் நம்மை தாக்க தொடங்கும். அதற்க்கு தீர்வாக தினமும் ஒரே ஒரு ஆப்பிளை உட்கொண்டால் போதும், நமது உடம்பில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்காது. 

இது மட்டுமில்லாமல், இதயம் தொடர்பான நோய்களிலிருந்தும் ஆப்பிளில் உள்ள சத்துக்கள் நம்மை பாதுகாப்பு. இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வையும், நிபுணர்களின் கருத்தையும் அறிந்த பிறகு, நீங்களும் தினமும் ஆப்பிள் சாப்பிடத் தொடங்குவீர்கள். நமது உடலில் கல்லீரல் கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கிறது என்பது தெரியும்.

கொலஸ்ட்ரால் நமது உடலில் உயிரணு சவ்வு மற்றும் வைட்டமின் டி உருவாவதற்கு உதவுகிறது. கொலஸ்ட்ரால் லிப்போபுரோட்டீன் உதவியுடன் இரத்தத்தில் செல்கிறது. லிப்போபுரோட்டீனுடன் குறைந்த அடர்த்தி கொலஸ்ட்ரால் உருவாகும்போது, ​​அது LDL அதாவது கெட்ட கொலஸ்ட்ரால் என்று அழைக்கப்படுகிறது. 

அதேபோல், அதிக அடர்த்தி கொலஸ்ட்ரால் அதாவது HDL என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. அதிக அடர்த்தி கொலஸ்ட்ரால்என்பது நல்ல கொழுப்பு எனப்படும். ஒருவேளை நமது உடலில் குறைந்த அடர்த்தி கொலஸ்ட்ரால் அளவு அதிக அடர்த்தி கொலஸ்ட்ராலை விட அதிகமாக இருந்தால், இதய நோய்களின் ஆபத்து பன்மடங்கு அதிகரிக்கிறது. 

இதனால் தினமும் 2 ஆப்பிளை உட்கொள்வது கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆப்பிள்களை தினமும் உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது. ஆப்பிள்களில் வைட்டமின் சி மற்றும் தாமிரம், வைட்டமின் கே மற்றும் வைட்டமின் ஈ உள்ளது. ஆப்பிளில் பெக்டின் என்ற சத்து உள்ளது, இது கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. 

மேலும் ஆப்பிளில் உள்ள பாலிபினால்கள் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை பல மடங்கு குறைக்கும். மேலும் ஒரு நாளைக்கு 2 ஆப்பிள்களை உட்கொள்வது இதய தொடர்பான நோய்களைக் குறைக்கிறது. இதனால் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஆப்பிள்களை தினமும்  உட்கொள்வதால், அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற நினைவாற்றல் இழப்பு நோய்களைத் தடுக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

to avoid cholesterol consume this fruit


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->