மக்காசோளத்தை சாப்பிட்டு இதனை குடித்தால் அவ்வுளவுதான்.! உங்கள் உடல் உபாதைகளுக்கு நீங்கள் வைக்கும் பெரிய ஆப்பு.!! - Seithipunal
Seithipunal


தினமும் நாம் சாப்பிடும் உணவு வகைகளில் பல சுவையான உணவு வகைகளையும்., பல சுவையான சிற்றுண்டி வகைகளையும் சாப்பிட்டு வருகிறோம். பெரும்பாலும் நாம் அனைவரும் சிற்றுண்டி அல்லது பிற உணவு வகைகளை உண்ட பின்னர் நீரை அருந்தும் பதக்கத்தை வைத்திருப்போம். 

அவ்வாறு சில வகை உணவுகளை சாப்பிட்ட பின்னர் தண்ணீர் அருந்துவதால் வயிற்று கோளாறால் அவதியுற நேரிடும். அவ்வாறு சாப்பிட்டு பின்னர் நீர் அருந்தக்கூடாத உணவு வகைகளை சாப்பிட்டு நீரை அருந்தும் பட்சத்தில் இரைப்பை பிரச்சனைகள் மற்றும் வயிறு உபாதைகளுக்கு வழிவகுக்கும். அந்த வகையில்., கீழ்காணும் உணவு வகைகளை சாப்பிட்ட பின்னர் நீரை அருந்துவதை தவிர்க்க வேண்டும். 

மக்கா சோளத்தை சாப்பிட்ட பின்னர் நீரை அருந்தினால் கடுமையான வயிற்று வலி மற்றும் வாயுத்தொல்லை ஏற்படுகிறது. இதற்கு காரணமாக நாம் மக்கா சோளத்தை சாப்பிட்ட பின்னர் நீரை அருந்தினால் ஜீரண நொதிகள் தனது இயல்பான நடவடிக்கையில் இருந்து மாற்றமடைந்து செரிமானத்தின் வேகத்தை வெகுவாக குறைத்து., செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. 

மக்காசோளத்தில் இருக்கும் கார்ப்ஸ்., ஸ்டார்ச் பொருட்களின் கர்ணாம்க வயிறில் இருக்கும் வாயுக்கள் வெளியேற வழிவகுத்து., வாயு பிரச்சனை மற்றும் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு வயிற்று வலியும் ஏற்படலாம். மக்கா சோளத்தை உண்ட பின்னர் சுமார் 45 நிமிடங்களுக்கு அடுத்தபடியாகவே நீரை அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர். 

அவ்வாறு தவிர்க்க முடிய சூழலில் நீர் கண்டிப்பாக அருந்த வேண்டும் என்ற பிரச்சனை ஏற்பட்டால் எலுமிச்சை சாற்றை அருந்தும் பட்சத்தில்., செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டு., செரிமானம் எளிதாக்கப்படுகிறது. மக்கா சோளத்தை சாப்பிடும் பட்சத்தில் முடிந்தளவு சூடாக அல்லது மிதமான சூட்டுடன் இருக்கும் வகையில் பார்த்து கொள்வது நல்லது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

to eat corn or makka solam with water will affect this type of problems


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->