இந்திய அணிக்கு முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து!
Chief Minister Rangasamy congratulates Team India
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி மற்றும் நியூசிலாந்து மோதியது. நேற்று துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபியை வென்று சரித்திரம் படைத்த இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் சமூக வலைத்தளத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்,மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன் கோப்பையை வென்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இது ஒரு தேசியப் பெருமை. முழு உறுதியுடனும், திறமையுடனும் போட்டியை எதிர்கொண்டு, வெற்றியின் முழக்கத்தை நாடு முழுவதும் எதிரொலிக்கும் வகையில் ஒரு வரலாற்று வெற்றியைத் தந்த இந்திய கிரிக்கெட் அணிக்கு எனது உளம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நாடு முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்த அற்புதமான வெற்றியை மகிழ்ச்சியுடனும் ஒற்றுமையையுடனும் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த வெற்றிக் கொண்டாட்டத் தருணத்தில் சக கிரிக்கெட் ரசிகர்களின் மகிழ்ச்சியில் என்னையும் இணைத்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் -என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார், .
https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FDirectorsbr%2Fposts%2Fpfbid02bet44B4jHQkMvLU5w6EHtAeesHia3BgGVrctKA2mooA8F9x8spEQ84Fah3KXTkbkl&show_text=true&width=500
English Summary
Chief Minister Rangasamy congratulates Team India