இனிவரும் காலங்களில் இசைக்கடவுள் இளையராஜா மேலும் பல உச்சங்களை அடைவார் - அன்புமணி இராமதாஸ்!
Anbumani ramadoss PMK Ilaiyaraaja
இசைக்கடவுள் இளையராஜா இனிவரும் காலங்களில் மேலும் பல உச்சங்களை அடைவார் என்று பா.ம.க தலைவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்தியுள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், இசையுலக சாதனைகளின் உச்சமாக லண்டனில் வேலியண்ட் என்ற தலைப்பில் சிம்பொனி இசையை இசைக்கடவுள் இளையராஜா அரங்கேற்றியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அளிக்கிறது. இதற்காக அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இளையராஜாவின் இசை வரலாற்றில் உச்சங்களுக்கு வரம்பு எதுவும் கிடையாது. ஒவ்வொரு முறை உச்சத்தை அடையும் போது அடுத்த இலக்கை நோக்கி வெற்றிகரமாக முன்னேற்றுவது தான் அவரது இயல்பாக இருந்திருக்கிறது.
இன்றைய நிலையில் சிம்பொனி சாதனை அவரது உச்சமாக இருந்தாலும் இனிவரும் காலங்களில் அவர் மேலும் பல உச்சங்களை அடைவார். அதற்காக அவருக்கு வாழ்த்துக்கள்! என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
Anbumani ramadoss PMK Ilaiyaraaja