கட்டுப்பாடு இல்லாத உடல் எடையால் அவதியா.? உஷார்.. இந்த அபாயங்கள் இருக்கின்றன.!
Weight Gain Shock reasons
உடல் எடை அதிகரிக்க உணவு மட்டும் காரணமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பின்வரும் காரணங்களாலும் உடல் எடை அதிகரிக்க கூடும்.
உடலில் ரத்த சர்க்கரை அளவானது சரியான விகிதத்தில் இல்லை என்றால் உடல் எடை இழப்பு அல்லது உடல் எடை அதிகரிப்பு ஏற்படலாம். இன்சுலின் தாக்கம் இருந்தால் நீரிழிவு நோய் இருக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். டைப் 2 நீரிழிவு நோயில் பாதிக்கப்பட்டவர்களில் பத்தில் எட்டு பேருக்கு உடல் எடை அதிகரிக்கிறது. நீரிழிவு நோயின் மரபணு வரலாறு ஏதாவது இருந்தால் உடல் எடையை கட்டுப்பாட்டோடு வைத்திருக்க வேண்டும்.
உயர் ரத்த அழுத்தத்தின் காரணமாகவும் உடல் எடை அதிகரிக்கும். ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடைக்கு இடையே நேரடி தொடர்பு இருக்கிறது. எனவே, ரத்த அழுத்தம் இருக்கின்ற நோயாளிகள் எடையை கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
கெட்ட கொலஸ்ட்ரால் தான் உடலில் உயர் ரத்த அழுத்தத்தை உருவாக்குகிறது. ரத்த அழுத்தம் சீராக இல்லாவிட்டால் மாரடைப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, உடல் எடை திடீரென அதிகரித்துக் கொண்டே இருந்தால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
தைராய்டு நோயாளிகளுக்கு எடை அதிகரிப்பு அல்லது எடை இழப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, உடல் எடையில் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக தைராய்டு பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை எடுக்க வேண்டும்
English Summary
Weight Gain Shock reasons